புனர்பூசம் நட்சத்திரம்

புனர்பூசம்  நட்சத்திரம் Mar 11, 2024

புனர்பூசம் நட்சத்திரம்

நட்சத்திர அணிவகுப்பில் ஏழாவது நட்சத்திரம் புனர்பூசம் ஸ்ரீ ராமபிரான் அவதரித்த அபூர்வ நட்சத்திரமாகும். ஆட்சி செய்யும் கிரகம் குருவாக இருந்தாலும், புதனுடைய ஆதிக்கம் முதல் மூன்று பாதங்களுக்கு வலுவாக இருக்கும். சிவப்பு வண்ணம்; தேவ கணம். மிதுன ராசிக்குள் மூன்று பாதமும், கடக ராசிக்குள் ஒரு பாதமும் இருக்கும் இது, 80 பாகை முதல் 9320 பாகை வரை வியாபித்துள்ளது. ஆன்மிக நாட்டமும் அறிவாற்றலும் இந்த நட்சத்திரத்தில் பிறந்த வர்களுக்கு அதிகமாக இருக்கும். ரமண மகரிஷி இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான் இந்த நட்சத்திரத்தை ஆட்சி செய்யும் கடவுள் அதிதி- பூமாதேவி, செல்வத்தையும் மற்றும் எல்லா நலன்களையும் வழங்கும் ஆற்றல் படைத்தது இது.
புகழ் உடையவர்கள்; புண்ணியவான்; இளம் வயதில் சிறிது வறுமைக்கோட்டுக்குக் கீழே சென்று, பிற்காலங்களில் அரசு வழித் தொல்லைகளை அனுபவித்து, பலராலும் நிந்திக்கப்பட்டு, பின்னர் குடும்ப வாழ்வில் பொன், பொருள் சேர்த்து, அறுபதாம் வயதில் செல்வமும் புகழும் சுலபமாகப் பெறுவார்கள் என கவி உணர்த்துகிறது