திருவாதிரை நட்சத்திரம்

திருவாதிரை  நட்சத்திரம் Mar 10, 2024

திருவாதிரை நட்சத்திரம்

நட்சத்திர அணிவகுப்பில் ஆறாவது நட்சத்திரம் திருவாதிரை மிதுன ராசி மண்டலத்தில் 6640 பாகை முதல் 80.00 பாகை வரை விரிந்துள்ள நட்சத்திரம். ஒரு கடிகாரத்தைப்போல் வானவெளியில் ஜொலிக்கும் தன்மையுடையது. உலகைக் காத்தருளும் உமாமகேஸ்வரன் உதித்த நட்சத்திரம் ஈஸ்வரனின் கழுத்தை அலங்கரிக்கும் சர்ப்பமாகிய இந்த ஸ்ரீ ராகு பகவானே இந்த நட்சத்திரத்தின் அதிபதியாவார். இருப்பினும் புதனுடைய பங்கும் இருக்கப் பெறுகிறது. திருவாதிரை என்றால் ஈரம் எளி நிறைந்த தன்மை என்று பொருள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் பிர சிந்திக்கும் திறன் மிகுதியாக உள்ளவர்கள் மழைக்குப்பின் வசந்த காலம் ன்ற வருவதுபோல் இவர்கள் வாழ்வில் துன்பத்திற்குப் பின்தான் இன்பம் மிகையாகும். மனித கணம், பெண் இனத்தைச் சார்ந்த இந்த நட்சத்திரம், ஆண்- பெண் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக வந்தால் -லி ரஜ்ஜுப் பொருத்தம் உண்டு. ஏக நட்சத்திரம் ஆகாது. எனினும், அது சிறப்பு நட்சத்திரமாவதால் ரஜ்ஜு தட்டாது (தடைப்படாது); பொருத்தம் உண்டு என திடமான முடிவுக்கு வரலாம்.
கோபம் இருக்கும் இடத்தில்தான் நல்ல குணம் இருக்கும் என நிரூபணம் செய்பவர்கள் இந்த நட்சத்திரக்காரர்கள். சிலர் ருசியோடு ல் சாப்பிட அதிக விருப்பம் காட்டுவார்கள். கலைஞானம் உடையவர்கள். 5ந் நட்சத்திர முதல் பாதத்தில் பிறந்திருந்தால் நல்ல குணவான். இதமாகப் ம் பேசி பிறரைத் தம் வலையில் வீழ்த்தும் புத்திசாலி. இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் படபடவெனப் பேசி கோபத்தை வரவழைத்தாலும், ஆபத்தில் கைகொடுப்பவர்கள். மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் வாதாடும் திறமை, சுலபத்தில் கடவுள் அனுக்கிரகம் கு பெற இயலாத நிலையில் காணப்படுபவர்கள். பெண்களிடம் சிலர் கூச்ச சுபாவத்தை வெளிப்படுத்துவார்கள். நான்காம் பாதத்தில் = பிறந்தால் துணிச்சலானவர்கள். நல்ல விவேகம் அமையப் பெறும். பந்து ஜன பகையைத் தவிர்க்க இயலாதவர்கள். மனதை இதமாக வைத்துக் கொள்வது நன்று. பிறர் கஷ்டப்படுவதைச் சகிக்க முடியாதவர்கள்