கார்த்திகை நட்சத்திரம்

கார்த்திகை நட்சத்திரம் Mar 7, 2024

கார்த்திகை நட்சத்திரம்

நட்சத்திர வரிசையில் மூன்றாவது நட்சத்திரம் கார்த்திகை வான மண்டலத்தில் 26 முதல் 40 பாகை வரை வியாபித்திருக்கும் இது மேஷ, ரிஷப ராசிகளுக்குள் இருக்கப் பெறும் ராட்சஸ குணம் நிரம்பியது. ஆறு நட்சத்திரங்கள் கொண்டது. செம்மை நிற முடையது. அக்னி மண்டலமாகும். ஆறுமுகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் பிறக்கும்போதே சூரிய தசையுடன் பிறக்கிறார்கள் இந்த நட்சத்திரத்தில் முதல் பாதத்தில் பிறப்பவர்கள் மட்டும் தோஷம் உடையவர்கள் என சாஸ்திரம் உணர்த்துகிறது இரவு நேரத்தில் குழந்தை பிறந்தால் தாய்க்கும், பகல் நேரத்தில் பிறந்தால் தந்தைக்கும் பின்னடைவுகள் ஏற்படும். அதற்குரிய சாந்திப் பரிகாரங்களைச் செய்வது நன்று.
பில் கிளின்டன், ரொனால்ட்ரீகள் ஆகியோர் கார்த்திகையில் பிறந்தவர்கள் பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 25 முதல் 35 மற்றும் 50 முதல் 56 வரையிலான வயதுகளில் இடம் மாற்றம், தொழில் மாற்றங்கள் ஏற்படுமாம். சோதித்துப் பாருங்கள். ஆட்சி புரிபவர் சூரியன். மொத்தத்தில் சுறுசுறுப்பும் துடுக்கும் அவசரத் தன்மையும் நிறைந்தவர்கள்.