நட்சத்திர வரிசையில் இரண்டாவது நட்சத்திரமாக முக்கோண வடிவத்துடன் உள்ள பரணி நட்சத்திரம் மனித கணத்தைச் சார்ந்தது. மேஷ ராசிக்குள் அமையப் பெற்றது. இது ராசியில் 13-20 பாகை முதல் 26-40 பாகை வரை வியாபித்துள்ளது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் பிறக்கும்போதே சுக்கிர தசையுடன் பிறப்பவர்கள். பரணியில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்கள் என்பது அனுபவப் பழமொழி எல்லாரும் தரணியை ஆள முடியுமா? ஆனால் ஏதோ ஒரு துறையில் தனது திறமைதனை வெளிப்படுத்தி சாதனைகள் புரிய இந்த நட்சத் திரம் அரும்பாடுபடும். உதாரணமாக, தத்துவ மேதை காரல் மார்க்ஸ் கம்யூனிசத்தை உலகளாவப் பரவச் செய்தவர். இவர் 5-5-1818-ல் பிறந்து 1883 வரை வாழ்ந்தவர்; பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர். சூரியன் பரணியில் அமர்ந்திருக்கப் பிறந்தவர் சதாம் ஹுசேன். எவருக்கும் தலை வணங்காது தூக்கு மேடையைச் சந்தித்த பரணி நட்சத்திரக்காரர் இவர் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனை ஆட்சியில் அமர்ந்திருந்தபோதே மாய வலையில் சிக்க வைத்து மதிமயக்கம் கொள்ள வைத்த மோனிகாவும் பரணியில் பிறந்தவர்தான்
Copyright © 2024 Sreemadam Jothida Nilaiyam & Research Centre. All Right Reserved.
Design: NANDHUTECHNOLOGIES.in